திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட சமுத்திரம் ஊராட்சி பகுதிகளான காந்தி நகர் மற்றும் கக் கன்ஜி நகர் பகுதிகளில் தொடர்ந்து குடிநீர் பிரச்சனை நிலவி வருகிறது.
குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு துரித நடவடிக்கை எடுக்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செவ்வா யன்று வல்லக்குண்டாபுரம் பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜனநாயக மாதர் சங்கத்தினர் புதுக் கோட்டை ஆட்சியரிடம் மனு கொடுக் கும் போராட்டத்தை புதன்கிழமை நடத்தினர்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் முற்றிலும் வறண்டுவிட்டன. இதனால் சென்னை நகரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதை சமாளிக்க சென்னை குடிநீர் வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.